இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி….

இராம. கார்த்திக் லெக்ஷ்மணன் அவர்கள் ஓர் உளவியல் ஆலோசகர் மற்றும் புகையிலை பழக்க மீட்பு நிபுணர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய் உளவியல் துறையில், புகையிலை பழக்கத்திலிருந்து மீட்டெடுத்தல் தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்து தனது முதுநிலை ஆய்வியல் – எம்.ஃபில். பட்டத்தை பெற்றிருக்கிறார். தனது முதுநிலை அறிவியல் பட்டத்தை, உளவியல் ஆலோசனை பாடத்தில், சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

தற்போது சென்னை கவுன்சலிங் சர்வீஸஸ் என்ற பெயரில் கோடம்பாக்கத்தில், ஓர் உளவியல் ஆலோசனை மையத்தையும் நடத்தி வருகிறார். மேலும் வணிக நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உளவியல் ஆலோசகராகப் பணிபுரிகிறார். பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார்.

சிகரெட்/புகையிலை பழக்கத்திலிருந்து மீண்டு வரவும், என்ன பாடங்கள்/ வேலைகள் தங்களுக்குப் பொருத்தமானவை என்பதைக் கண்டுபிடிக்கவும், மன அழுத்தம்/மனச்சோர்வு/பதற்றம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் கணவன்-மனைவி உறவு மேம்படவும் உளவியல் ஆலோசனை அளித்து வருகிறார்.

உளவியல் தொடர்பான கட்டுரைகளை எழுதியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் எளிய தமிழில் உளவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: karthik.psychologist@ymail.com

இணையதள முகவரி: www.counselingchennai.com


 

GNUஅன்வர் அவர்கள் தனது விடாமுயற்சியால் உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் தனது பல வருட சிகரெட் பழக்கத்தை ஒரேடியாக கை விட்டவர், ஒரு வலைப்பூ எழுத்தாளர். 2008-ம் ஆண்டு முதல் www.gnunanban.blogspot.in என்ற வலைப்பூவில் GNUஅன்வர் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறார். மேலும் ஆனந்த விகடன் இதழ் இவரது வலைப்பூவை சிறந்த வலைப்பூவாக தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது.  மேலும் இவர் ஒரு கட்டற்ற மென்பொருள் கருத்தியளாளர் (ம) ஆதரவாளர். சென்னை லினக்ஸ் குழுவின் உறுப்பினராகவும் freetamilebooks.com திட்டத்தின்கொள்கைப் பரப்பு, எழுத்தாளர்களை அணுகி, ஆக்கங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடக் கோருதல், மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறார். புகைப் பழக்கத்தால் தான் அடைந்த ஒரே பயனாக இந்த புத்தகத்தை எழுதியதைக் குறிப்பிடுகிறார்.

மின்னஞ்சல் முகவரி: GNUanwar@gmail.com

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *