10 நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்….

உங்களுக்கு ஓரளவுக்கு என்னை விட வேண்டும் என்ற சிந்தனை உள்ளது. நல்லது. இப்போது நான் சொல்வதை செய்யுங்கள். (தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் அல்லது செயல்பாட்டு நிலையில் இருந்தாலும், இங்கு சொல்லப்போவதை செய்யுங்கள்)

இங்கு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில், என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல, கெட்ட விஷயங்கள் பற்றியும், என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல, கெட்ட விஷயங்கள் பற்றியும் எழுதுங்கள்.

என்னை பயன்படுத்துவது

நல்ல விஷயங்கள்

1.

2.

3.

4.

5.

6.

7.

8

மதிப்

பெண்கள்

கெட்ட விஷயங்கள்

1.

2.

3.

4.

5.

6.

7.

8

மதிப்

பெண்கள்

என்னை விட்டுவிடுவது

நல்ல விஷயங்கள்

1.

2.

3.

4.

5.

6.

7.

8

மதிப்

பெண்கள்

கெட்ட விஷயங்கள்

1.

2.

3.

4.

5.

6.

7.

8

மதிப்

பெண்கள்

நேர்மையாக மனம் திறந்து எழுதுங்கள். என்னை பயன்படுத்துவதால், உங்களுக்கு, நன்றாக கவனம் செலுத்த முடியலாம், டென்ஷன் குறையலாம். என்னை பயன்படுத்தினால்தான் டீ குடித்த, சாப்பிட்ட திருப்தி இருக்கலாம். இது போன்றவற்றை என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் எழுதுங்கள்.

என்னை பயன்படுத்துவது, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிடிக்காமல் இருக்கலாம், நீங்கள் அடிக்கடி எனக்காக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். பணம் நிறைய செலவாகலாம். பல விதமான நச்சுப் பொருட்களை நீங்கள் உள்வாங்குவது உங்களை மிகுந்த கவலையும், குற்ற உணர்வும் அடையச் செய்யலாம். இது போன்றவற்றை என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் எழுதுங்கள்.

என்னை விட்டு விட்டால், உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்பட தேவையில்லாமல் இருக்கலாம். உங்கள் மீது அடிக்கும் என் நாற்றம் போய் எல்லோரும் உங்கள் அருகில் தயங்காமல் வரலாம். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கலாம். இது போன்றவற்றை என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் எழுதுங்கள்.

என்னை விட்டுவிட்டால், உங்களுடன் சேர்ந்து புகை பிடிக்கும் நண்பர் வட்டத்திலிருந்து நீங்கள் விலகி இருக்க நேரலாம். ஏதோ ஒரு நெருங்கிய நண்பரை இழந்துவிட்ட சோகம் உங்களை ஆட்கொள்ளலாம். என்னை சட்டென நிறுத்துவதால் உடல் உபாதைகள் பல ஏற்படும் என நீங்கள் கவலைப்படலாம். இது போன்றவற்றை என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் எழுதுங்கள்.

எதையும் விட்டு விடாதீர்கள். சின்ன சின்ன விஷயங்களையும் நன்றாக யோசித்து எழுதுங்கள்.

எழுதி முடித்த பின்னர், என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் உள்ளவை ஏதாவது என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் திரும்ப வந்திருக்கிறதா என பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால், எங்கு மிகச்சரியாக பொருந்துமோ அங்கு அந்த பாயிண்ட் வைத்து விட்டு, மற்றொரு இடத்தில் அந்த பாயிண்ட் எடுத்து விடுங்கள். அதே போல், என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நல்ல விஷயங்களில் உள்ளவை ஏதாவது என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்களில் திரும்ப வந்திருக்கிறதா எனப் பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால், எங்கு மிகச்சரியாக பொருந்துமோ அங்கு அந்த பாயிண்ட் வைத்து விட்டு, மற்றொரு இடத்தில் அந்த பாயிண்ட் எடுத்து விடுங்கள்.

நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு பாயிண்ட்-ம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்தனியானவை என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரே விஷயத்தையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பாயிண்ட்-ஆக எழுதியிருக்கிறீர்கள் என்றால், அந்த குறிப்பிட்ட பாயிண்ட்-களை இணைத்து விடுங்கள்.

இப்போது, நீங்கள் நான்கு கட்டங்களில் தனித்தனியாக எழுதியிருக்கும் ஒவ்வொரு பாயிண்ட்-க்கும், 1 முதல் 10 வரை உள்ள எண்களில் ஒரு மதிப்பெண் தர வேண்டும். நல்ல விஷயங்களில் உள்ள ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் எந்த அளவுக்கு நல்ல விஷயம் என்பதை உங்கள் மதிப்பெண் மூலம் தெரியப்படுத்துங்கள். 10 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் என்றால் அந்த குறிப்பிட்ட பாயிண்ட் மிக அதிக அளவுக்கு நல்ல விஷயம், 1 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் எஎன்றால், அந்த குறிப்பிட்ட பாயிண்ட் மிக குறைந்த அளவுக்கே நல்ல விஷயம். உங்கள் மதிப்பெண் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற எண்களில் ஒன்றாக இருக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம். அவ்வபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ உடனே அந்த எண்ணை எழுதி விடுங்கள்.

அதே போல், கெட்ட விஷயங்களில் உள்ள ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் எந்த அளவுக்கு கெட்ட விஷயம் என்பதை உங்கள் மதிப்பெண் மூலம் தெரியப்படுத்துங்கள். கெட்ட விஷயங்களில் உள்ள ஒரு பாயிண்ட்-க்கு 1 என்று மதிப்பெண் போடுகிறீர்கள் என்றால் மிகக் குறைந்த அளவே கெட்ட விஷயம், 10 என்று போடுகிறீர்கள் என்றால் மிக அதிக அளவு கெட்ட விஷயம். ஆகவே 1 முதல் 10 வரை உள்ள எண்களில் எந்த எண் உங்கள் எண்ணத்தை சரியாக பிரதிபலிக்குமோ அந்த எண்ணை மதிப்பெண்ணாக ஒவ்வொரு பாயிண்ட்-க்கும் அளியுங்கள்.

ஆக நான்கு கட்டங்களிலும் உள்ள பாயிண்ட்-களுக்கு மதிப்பெண் கொடுத்தாகி விட்டதா?

ஒரு ஹோட்டலுக்கு 11 மணிக்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏன் இப்படி திடீரென சம்பந்தம் இல்லாமல் ஹோட்டல் பற்றி பேசுகிறேன் என்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது. பொறுமையாக நான் சொல்லப்போவதை கவனியுங்கள். ஹோட்டலில் சப்பாத்தி, தோசை இந்த இரண்டு மட்டுமே இருக்கிறது. நீங்கள் சப்பாத்தி ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அதற்கு காரணம் இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்,

1. தோசையை விட உங்களுக்கு சப்பாத்தி பிடித்திருக்கலாம் அல்லது

2. தோசை சாப்பிட பிடிக்காமல் சப்பாத்தி வேண்டுமெனலாம்.

எனவே இரு செயல்களில், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டும் என தேர்ந்தெடுப்பதற்கு, அந்த முதல் செயலில் அதிக நன்மைகள்/ நல்ல விஷயங்கள் இருக்கலாம் அல்லது அந்த மற்றொன்றாக இருக்கும் இரண்டாவது செயலில் உள்ள அதிக கெட்ட விஷயங்கள் இருக்கலாம்.

அதே போல், நீங்கள் என்னை பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பவை

() என்னை பயன்படுத்துவதில் உள்ள நல்ல விஷயங்கள்

(ஆ) என்னை பயன்படுத்துவதை விட்டுவிட்டால் ஏற்படும் கெட்ட விஷயங்கள்

ஆகவே இந்த இரண்டையும் தலைப்புகளாகக் கொண்ட கட்டங்களில் உள்ள பாயிண்ட்-களை மொத்தமாகக் கூட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான், என்னை பயன்படுத்துவதற்கான பாயிண்ட்-களில் மொத்த மதிப்பெண்கள்.

நீங்கள் என்னை விட்டுவிடுவதற்குக் காரணமாக இருப்பவை

() என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் கெட்ட விஷயங்கள்

(ஆ) என்னை பயன்படுத்துவதை விட்டுவிட்டால் ஏற்படும் நல்ல விஷயங்கள்.

ஆகவே இந்த இரண்டையும் தலைப்புகளாகக் கொண்ட கட்டங்களில் உள்ள பாயிண்ட்-களை மொத்தமாகக் கூட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான், என்னை பயன்படுத்துவதை விட்டுவிடுவதற்கான பாயிண்ட்களின் மொத்த மதிப்பெண்கள்.

இப்போது பாருங்கள், எதற்கு மதிப்பெண்கள் அதிகமாக இருக்கிறது என்று! என்னை பயன்படுத்துவதற்கா? அல்லது என்னை விட்டு விடுவதற்கா?

என்னை பயன்படுத்துவதற்கு அதிக மதிப்பெண்கள் இருந்தால், இதற்கு முன்னர் நான் சொல்லியவை அனைத்தையும், புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, அவற்றில் கூறியுள்ளவற்றை உங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, தொடருங்கள். என்னை விட்டுவிடுவதற்கு அதிக மதிப்பெண்கள் இருந்தால், நல்லது. தொடர்ந்து படியுங்கள். நிரப்பப்பட்ட அந்த அட்டவணையிலிருந்து, என்னை விட்டுவிடுவதால் ஏற்படும் நன்மைகள், என்னை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றை தனியாக எழுதி, லாமினேட்(laminate) செய்து, நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் பாக்கெட்டிலோ, பர்ஸிலோ வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்னை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நினைப்பு வரும் போதெல்லாம் என்னை ஏன் விட்டொழிக்க வேண்டும் என்று நீங்கள் எழுதிய காரணங்களை பார்த்துக்கொள்ளுங்கள். வேண்டுமானால், உங்கள் குரலிலேயே அவற்றை பதிவு செய்து அவ்வபோது கேட்டுவாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *