8 ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது…

நான் உங்களை விட்டு போக வேண்டும் என முடிவு செய்வதற்கு முன்னால், நீங்கள் என்னை விட்டு போக வேண்டும் என உண்மையிலே முடிவு எடுத்துவிட்டீர்களா? இதை நீங்களும், நானும் தெரிந்து கொள்ள பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இவற்றை கவனமாக படித்து, திறந்த மனதுடனும், நேர்மையாகவும், உங்களுடைய விடைகளை டிக் () அடித்து தெரிவிக்கவும். அதன் மூலம் நீங்கள் எவ்வளவு தூரம் என்னை விட்டுவிட உறுதியாக இருக்கிறீர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.

. எண்

வாக்கியங்கள்

முழுவதுமாக ஏற்று கொள்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன் மறுக்கிறேன் முழுவதுமாக மறுக்கிறேன்

1

நீ எனக்கு தீங்கு செய்கிறாய் என எனக்கு நன்றாகத் தெரியும்.

2

உன்னை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்

3

என்னால் முடிந்த வழிகளிலெல்லாம் உன்னை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்கிறேன்.

4

நீ எனக்கு தீங்கு செய்ய மாட்டாய் என நான் நம்புகிறேன்.

5

உன்னால் ஏற்படும் கெட்ட விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்

6

உன்னைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றி பலரிடமும் அடிக்கடி ஆலோசிக்கிறேன்.

7

கடந்த ஆறு மாதங்களில், உன் பயன்பாட்டை குறைத்திருக்கிறேன் () முழுவதுமாக நிறுத்தி இருக்கிறேன்.

8

உன்னைப் பயன்படுத்த தூண்டும் சூழ்நிலைகளிலிருந்து, என்னை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

9

உன்னைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கென்று எந்த ஒரு காரணமும் எனக்கு இல்லை.

10

உன்னைப் பயன்படுத்துவதை விட உன்னை நிறுத்துவதே, அதிக நன்மைகள் தருகிறது என நான் நினைக்கிறேன்.

11

எப்படி நான் உன்னைப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்பது பற்றிய தெளிவான திட்டம் என்னிடம் இருக்கிறது.

12

உன்னை பயன்படுத்தச் செய்யும் சூழ்நிலைகளை நான் மனதார தவிர்க்கிறேன்

13

உன்னைப் பயன்படுத்துவதை என்னால் நிறுத்த முடியாது என எனக்குத் தெரியும்

14

கடந்த சில மாதங்களாகவே உன்னைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

15

நான் திட்டமிட்ட வழிகளில் என்னால் உன் பயன்பாட்டை நிறுத்த முடியவில்லை எனில், இதற்காகவே இருக்கும் நிபுணர்களை நான் அணுகுவேன்.

16

உன்னைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமென நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

17

உன்னைப் பயன்படுத்துவதை அதிகபட்சம் அடுத்த ஆறு மாதங்களில் நிறுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன்

18

உன்னை பயன்படுத்துவதை வெற்றிகரமாக நிறுத்த மற்றவர்களிடமிருந்து உதவி பெற்றுக் கொள்வேன்

வாக்கியங்களுக்கு நேர்மையாக விடையளித்து விட்டீர்கள் என நம்புகிறேன். இப்போது பார்க்கலாம், நீங்கள் என்னை உண்மையிலேயே விட வேண்டும் என நினைக்கிறீகளா என்று!

அதற்கு முன், என்னை விட்டுவிட முயற்சி செய்பவர்களை ஆராய்ச்சி செய்த ப்ரொச்சஸ்கா & டிகிளமண்ட் ஆகிய புகழ் பெற்ற உளவியலாளர்கள் நடத்தை மாற்றம் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள்.

நடத்தையில் ஏற்படும் மாற்றம் திடீரென உடனடியாக நிகழ்வது இல்லை. நடத்தை மாற்றம் என்பது 5 படி நிலைகளில் நடக்கிறது.

.

எண்

நடத்தை மாற்ற நிலை

விளக்கம்

1 சிந்தனைக்கு முந்திய நிலை நடத்தையில் மாற்றம் செய்ய வேண்டியதே இல்லை என்ற எண்ணம் இருக்கும் நிலை
2 சிந்தனை நிலை நடத்தையில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும் நிலை
3 தயார்செய்யும் நிலை நடத்தை மாற்றத்தை செய்ய தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ளும் நிலை
4 மாற்றம் செய்யும் நிலை நடத்தை மாற்றத்தை உண்மையில் செய்யும் நிலை
5 மாற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும் நிலை செய்துள்ள நடத்தை மாற்றத்தை வாழ்க்கை முழுவதுற்குமாக தக்க வைத்துக்கொள்ளும் நிலை

ஆகவே நீங்கள் என்னை விட்டுவிட துடிக்கும் நடத்தை மாற்றம் என்பது இந்த நிலைகளை கடக்க வேண்டியுள்ளது.

 

என்னை விட்டுவிட முயற்சிக்கும் நீங்கள் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை மேலே கொடுக்கப்பட்டிருந்த வினா நிரலுக்கு நீங்கள் அளித்த விடைகளின் மூலம் கண்டறியலாம். இந்த வினா நிரல், அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு இதன் முடிவுகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

வரிசை எண்கள் 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15, 17, 18 ஆகியவற்றிற்கு பின்வருமாறு மதிப்பெண்கள் இடுங்கள்.

முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் – 3

ஏற்றுக்கொள்கிறேன் – 2

மறுக்கிறேன் – 1

முழுவதுமாக மறுக்கிறேன் – 0

வரிசை எண்கள் 1, 9, 13, 16 ஆகியவற்றிற்கு பின்வருமாறு மதிப்பெண்கள் இடுங்கள்.

முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் – 0

ஏற்றுக்கொள்கிறேன் – 1

மறுக்கிறேன் – 2

முழுவதுமாக மறுக்கிறேன் – 3

பின்வரும் அட்டவணையில் முதல் நெடுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்களுக்கான மதிப்பெண்களை கூட்டி, இரண்டாவது நெடுவரிசையில் போடவும். பிறகு மூன்றாவது நெடுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுடன் பெருக்கி நான்காவது நெடுவரிசையில் உள்ள கட்டங்களில் எழுதவும்.

வரிசை எண்கள்

மதிப்பெண்களின்

கூட்டுத்தொகை

எண்ணுடன் பெருக்கவும்

பெருக்குத்தொகை

நடத்தை மாற்ற நிலை

1, 4

16.6

சிந்தனைக்கு முந்திய நிலை

10, 14, 16, 17

6.6

சிந்தனை நிலை

2, 5, 6, 9, 15, 18

5.5

தயார்படுத்திக்கொள்ளும் நிலை

3, 7, 8, 11, 12, 13

5.5

மாற்றம் செய்யும் நிலை

எந்த நடத்தை மாற்ற நிலையில் அதிகமான மதிப்பெண் இருக்கிறதோ அதுவே உங்களின் நடத்தை மாற்ற நிலை. ஒரு வேளை இரு நடத்தை மாற்ற நிலைகளுக்கு ஒரே மதிப்பெண் வந்திருந்தால், வரிசையில் முதலில் இருக்கும் நடத்தை மாற்ற நிலையை உங்களுடையது என எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சிந்தனைக்கு முந்திய நிலை தவிர, எந்த நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமானால், “ஒரு தடவ நான் முடிவு பண்ணிட்டேனா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்” என்று உங்களுக்கு சொல்லிக்கொண்டு என்னை உங்களிடமிருந்து விலக்கி வையுங்கள்.

ஒவ்வொரு நடத்தை மாற்ற நிலைக்கும் உள்ள விஷயங்களை தனித்தனியாக சொல்லப்போகிறேன் என்றாலும், உங்களுடைய நடத்தை மாற்ற நிலைக்காக விஷயங்களை நேராக படிக்கச் செல்லாமல், வரிசையாகவே படியுங்கள். நீங்கள் இருக்கும் நிலையிலேயே உங்களைத் தொடர்ந்து இருக்க வைக்கவும், அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லவும் எல்லாவற்றையும் தொடர்ச்சியாக படியுங்கள்.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *